பழைய ரூ.500 நோட்டுகளை, இன்று இரவு 12 மணிக்கு மேல் பயன்படுத்த முடியாது மத்திய அரசு அறிவிப்பு

பழைய ரூ.500 நோட்டுகளை, இன்று இரவு 12 மணிக்கு மேல் பயன்படுத்த முடியாது மத்திய அரசு அறிவிப்பு | இன்று (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கும் மேல் பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. மத்திய அரசு அவகாசம் மத்திய அரசு கடந்த மாதம் 8-ந் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. எனினும் பஸ், ரெயில், விமான நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஆஸ்பத்திரி, சுங்கச் சாவடிகள், அடக்கஸ்தலங்கள், மயானங்கள், மருந்து கடைகள், குடிநீர், மின்சாரம், பல்வேறு வரிகள் உள்ளிட்ட கட்டணங்களுக்கு இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ள 72 மணி நேரம் வரை அனுமதிக்கப்பட்டது. இந்த காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு கடைசியாக டிசம்பர் 15-ந் தேதி வரை பயன்படுத்திக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதித்தது. இன்றுடன் முடிகிறது இதற்கிடையே, பழைய ரூ.1,000 நோட்டை பயன்பாட்டு கட்டணங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதை தடை செய்து ரூ.500 நோட்டை மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் பழைய ரூ.500 நோட்டை பயன்பாட்டு கட்டணங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான அவகாசம் இன்று (வியாழக்கிழமை) இரவு 12 மணியுடன் முடிகிறது. இதுபற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "பழைய ரூ.500 நோட்டை பயன்பாட்டு கட்டணங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான விதிவிலக்கு 15-ந் தேதி (இன்று) நள்ளிரவுடன் முடிவடைகிறது" என்று குறிப்பிட்டு இருந்தார். எனவே இதற்கு பிறகும் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரிய வந்து உள்ளது. டெபாசிட் செய்யலாம் மத்திய அரசின் அறிவிப்பால் மின்சாரம், குடிநீர் போன்ற பயன்பாட்டு கட்டணங்கள் செலுத்துவதற்கும் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்வதற்கும் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும் இனி பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த முடியாது. அதே நேரம் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தவாறு இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments