முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது. அப்பல்லோ மருத்துவமனை சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல், மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கிரிட்டிக்கல் கேர் யூனிட் பிரிவில் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் தேறி சாதாரணமாக வாய்மூலம் உணவு உட்கொள்ளும் அளவிற்கு முன்னேறினார். இதன் அடிப்படையில் அவர் கிரிட்டிக்கல் கேர் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருக்கு சிறந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை நன்கு தேறி வந்தது. துரதிஷ்டவசமாக டிசம்பர் 4ம் தேதி மாலை அவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் இன்டென்சிவ் கேர் பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. உலக அளவில் அளிக்கப்படும் ஒரு சிறந்த சிகிச்சைதான் எக்மோ சிகிச்சை அவருடைய உயிரை காப்பாற்ற இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அவர்கள் உடல் நிலை மிகவும் மோசமடைந்து 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

No comments:

Post a Comment