பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்


பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் | பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் கட்டாய தேர்ச்சி முறை இருக்கக் கூடாது என்ற பரிந்துரைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. கட்டாய தேர்ச்சி முறை தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் 8-ம் வகுப்பு வரை எந்த வித தடங்கலும் இன்றி அடுத்தடுத்த வகுப்புகளில் சேரலாம். அவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் கூட 8-ம் வகுப்பு வரை அடுத்த வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அண்மையில் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் ஆலோசனைக் குழு இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டது. அப்போது சில மாநிலங்கள், '8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை என்பது தேவையற்றது. இதை 5-ம் வகுப்புடன் நிறுத்திக் கொள்ளலாம். எனவே தற்போதுள்ள விதிமுறையை மறு ஆய்வு செய்யவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தன. பயம் இல்லாமல் போய்விடும் இதை ஏற்றுக்கொண்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் ஆலோசனை குழு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அதை பரிந்துரை செய்தது. அதில், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பது நீடித்தால் மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பய உணர்வை இழந்து ஒழுக்கம் அற்றவர்களாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் கல்வியின் தரமும் பாதிக்கப்படும். எனவே தற்போதுள்ள நடைமுறையை கைவிட்டு, 5-ம் வகுப்பு வரை மட்டும் கட்டாய தேர்ச்சி இருந்தால் போதுமானது என்று குறிப்பிட்டு இருந்தது. சட்ட அமைச்சகம் ஒப்புதல் இதை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் 16-வது பிரிவில் திருத்தம் செய்தது. பின்னர், சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக இந்த பரிந்துரையை அனுப்பி வைத்தது. சட்ட அமைச்சகமும் இதற்கான ஒப்புதலை வழங்கி விட்டது. எனவே வரும் கல்வி ஆண்டில் இருந்தே 5-ம் வகுப்புக்கு மேல் பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி இல்லை என்ற சட்டவிதி நடைமுறைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment