எல்.ஐ.சி.யில் 601 வேலை | கடைசி நாள் : 30-12-2016

எல்.ஐ.சி.யில் 601 வேலை | பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி. இந்தியா நிறுவனத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்ட், இன்சூரன்சு அட்வைசர் போன்ற பணிகளுக்கு 601 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா 320 பணியிடங்களும், நாக்பூர் கிளையில் 100 பணிகளும், புனே கிளையில் 100 பணிகளும், அவுரங்காபாத்தில் 81 பணிகளும் உள்ளன. அந்தந்த பகுதிக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் ஏஜெண்ட் பணிக்கும், 55 வயதுக்கு உட்பட்டவர்கள் அட்வைசர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். ஏஜெண்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். அட்வைசர் பணி விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2க்கு பிறகு டிப்ளமோ, பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். புனே பணிக்கு 30-12-2016-ந் தேதிக்குள்ளும், இதர கிளை பணிகளுக்கு 31-12-2016-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். இவை பற்றிய விவரங்களை அந்தந்த மண்டல எல்.ஐ.சி இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment