8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்


8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம் | 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய் யலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளதாவது: 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு (இஎஸ்எல்சி) ஜனவரி 4-ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர் வுக்கு அரசுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்க ளில், அரசு சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 27-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) முதல் www.tngdc.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும்போது, விண் ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். உரிய தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர் வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர் களுக்கு தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு குறித்து தனிப் பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்பப்படாது என்று அந்த செய்தி குறிப்பில் அரசுத் தேர்வு கள் இயக்குநர் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment