தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை


தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் அரசு உடனடியான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கும் ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுப் பள்ளிகளில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்கு முதல் முறையாக ஏப்ரல் 2014 முதல் ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ7000/- வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. வாரம் மூன்று அரைநாளாக, மாதத்திற்கு பன்னிரண்டு அரைநாளாக ஒப்பந்த பணியாக, தொகுப்பூதியப் பணியாக, தற்காலிகப் பணியாக உள்ளதால் பண்டிகை போனஸ்கூட மறுக்கப்பட்டு வருகிறது. பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டு வருகிறது. 58 வயது பூர்த்தி அடைந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டு வருகிறது. மகளிர் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படவில்லை. 14வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடரில் மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியில் உறுதியளித்ததை நடைமுறைப்படுத்தி, கடந்த ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான(ரூ.513019000) 51 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரம் தொகுப்பூதியத்தை பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருவதைப்போல தமிழத்திலும் வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு வேலை வழங்கப்படும் முறையை தமிழத்திலும் வழங்க வேண்டும். பகுதிநேரப் பயிற்றுநர்களின் ஊதியம் மற்றும் பணி சார்ந்த கோரிக்கைகளை பலமுறை வைத்தும் இதுவரை ஏற்கப்படவில்லை. 14வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடருக்கு முன்பு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்ட கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வும், செவிலியர்களுக்கு படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய உறுதிமொழியும் அரசால் செய்யப்பட்டது. ஆனால் ஜாக்டோ அமைப்பின் 08.10.2015 மற்றும் 01.02.2016 போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசின் உத்தரவின்படி முழுமையாக பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வோ () பணி முன்னேற்றம் சார்ந்த எந்தவொரு உறுதிமொழியோ இதுவரை இல்லாத நிலையால் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே பள்ளிக்கல்வி செயலர், அனைவருக்கும் கல்வி இயக்க செயலர்கள் அரசிடம் பரிந்துரை செய்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக் கமிஷன் அமுல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தும்போது, மாநில அரசும் அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. எனவே பகுதிநேரப் பயிற்றுநர்களைப் போல பணியாற்றிவரும் தற்காலிகமாக, ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில் அரசுப் பணியை செய்துவரும் அனைவருக்கும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், எஸ்..பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் அரசுப்பணியை தற்காலிகமாக, ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிபவர்களின் தற்போதைய நிலைகள், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தானாக முன்வந்து கண்காணித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அனைவருக்காகவும் கடலூர் செந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் CELL NO - 9487257203

No comments:

Post a Comment