டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வேலை

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வேலை | தகவல் தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இன்டலிஜென்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (.சி.எஸ்..எல்.). பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில் பிரிவில் 58 பணியிடங்கள், எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக் பிரிவில் 12 பணியிடங்கள் என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-12-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.icsil.in/jobs என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment