கண்காணிப்பில் அங்கன்வாடி சத்துணவு மையங்கள்

கண்காணிப்பில் அங்கன்வாடி சத்துணவு மையங்கள் | அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் உணவு தரம், சுகாதாரத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தெருக்களில் கூவி விற்போர் முதல், பெரிய வணிக நிறுவனங்கள் வரை, உணவு பொருட்களை விற்பனை செய்வதற்கு, உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், மதுக்கடைகள், 'பார்களும்' உரிமம் பெற வேண்டும். இதற்கான கெடு ஆக., 4ல் முடிந்தது. தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு நிறுவனங்களில் சோதனை நடத்தி, தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அந்தந்த மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லுாரிகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அங்கன்வாடி, சத்துணவு மையங்களும் உணவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மையங்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம். மைய அமைப்பாளர்களிடம் தரமுள்ள உணவு பொருட்கள் வழங்கவும், சுகாதாரத்தை கடைபிடிக்கவும் அறிவுறுத்தி வருகிறோம்' என்றார்.

No comments:

Post a Comment