அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் வர்தா...வருகிறார்...

புயல் கரையை கடந்தது அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும் | புயல் நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்து வலுவிழந்துவிட்ட நிலையில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருந்தது. இது இன்று (நேற்று) அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், நாகப்பட்டினம்- காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இது பலவீனமடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, தமிழகத்தின் உள் பகுதியில் உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். நேற்று காலை 8.30 மணி அளவில் எடுக்கப்பட்ட மழை அளவின்படி, அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் தெற்கு அந்த மான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம், அதன் இணையதளத்தில் தெரிவித் துள்ளது. அதில் கூறியிருப்ப தாவது: மலேசிய தீபகற்பம் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி யுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. அது அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறக்கூடும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த புயல் 'வர்தா' தற்போது கரையை கடந்துள்ள புயலுக்கு 'நடா' (பெருந் தன்மை) என்று ஓமன் நாடு பெயர் சூட்டியிருந்தது. அடுத்து உரு வாகும் புயலுக்கு உருது மொழியில் 'வர்தா' என பாகிஸ்தான் நாடு பெயர் சூட்ட உள்ளது.

No comments:

Post a Comment