சேமிப்பு கிடங்கு கழக தேர்வு ஒத்திவைப்பு

சேமிப்பு கிடங்கு கழக தேர்வு ஒத்திவைப்பு | தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவி சேமிப்பு கிடங்கு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சென்னை மேற்கு முகப்பேர் வேலம்மாள் மெட் ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் தேதி (நாளை ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது இத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும், புதிய தேர்வு தேதி குறித்த தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழகம் அறிவித் துள்ளது.  

No comments:

Post a Comment