சோதனைகளை சாதனைகளாக மாற்றிய ‘இரும்புப் பெண்’

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய 'இரும்புப் பெண்' அடுக்கடுக்காக வந்த சோதனைகளை எல்லாம் துணிவுடன் எதிர்கொண்டதோடு அரசியலில் எதிர்நீச்சல் போட்டு உச்சத்தை தொட்டவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். மைசூர் மகாராஜாவின் குடும்ப டாக்டரான ரங்காச்சாரியின் மகன் ஜெயராம் தான் இவரது தந்தை. தாயார் நடிகை சந்தியா. திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த ரங்கசாமி அய்யங்கார், ஜெயலலிதாவின் தாய் வழி தாத்தா. இந்த குடும்பம் வேலை காரணமாக ஆந்திராவிலும் பின்னர் பெங்களூரிலும் குடியேறியது. ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற ஒரு அண்ணனும் உண்டு. ஜெயலலிதாவுக்கு ஒரு வயது ஆனபோது தகப்பனார் காலமாகிவிடவே, ஜெயலலிதா ஒரே இடத்தில் தங்கி படிக்க முடியாமல் சென்னை - பெங்களூரு - சென்னை என்று இடம் மாறி மாறி படிக்க வேண்டியதாயிற்று. முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார். படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். 10 முதல் 16 வயது வரை சென்னை சர்ச்பார்க் கான்வென்டில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12-வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும் இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழைப் போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். மேல்படிப்புக்காக முயற்சிக்கும் போது தான் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு, சினிமா உலக பிரவேசம் நடந்தது. ஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். சினிமா உலகில் நுழைந்தார் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லை என்றாலும் குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார். தொடக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்தாலும் கதாநாயகியாக நடித்து 1965-ல் வெளிவந்த இயக்குனர் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' தான் அவரது முதல் தமிழ்படம். அந்த படத்தயாரிப்பின் போதே பி.ஆர். பந்துலுவின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன. தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். அதே போல் சிவாஜிகணேசன், என்.டி. ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சோபன்பாபு, கிருஷ்ணா போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். 'வெண்ணிற ஆடை' படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த 'எபிசில்' (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தைப் பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்! என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். முதல் படத்திலேயே கதாநாயகியாக நடித்து புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்றார். ஜெயலலிதாவின் 100-வது படமான 'திருமாங்கல்யம்' 1974-ல் வெளிவந்தது. அதன்பிறகு நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டார். 1980-ல் 'நதியை தேடி வந்த கடல்' என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 120 படங்களுக்கு மேல் நடித்து முடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் 'வேதா') அரசியல் பிரவேசம் சினிமா உலக வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஜெயலலிதா, 1982-ல் .தி.மு.. உறுப்பினராகச் சேர்ந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில் கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி .தி.மு.. கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். ஜெயலலிதாவை 1984-ல் ராஜ்யசபா உறுப்பினராக்கி பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார். பாராளுமன்ற .தி.மு.. துணைத் தலைவராகவும் ஆக்கினார். 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததை தொடர்ந்து அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வி எழ, .தி.மு..வில் பதவிச்சண்டை உருவானது. ஜெயலலிதா கோஷ்டி, ஆர்.எம். வீரப்பன் கோஷ்டி என்று கட்சி 2 ஆக பிளவுபட்டது. முடிவில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றார். இதனை தொடர்ந்து சட்டசபை கூடியபோது பெரும் ரகளை ஏற்பட்டது. 24 நாட்களே ஆட்சியில் இருந்த ஜானகி அம்மாள் தலைமையிலான அமைச்சரவை 1988 ஜனவரி 28-ந்தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. 1989 ஜனவரி 21-ந்தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.. வெற்றி பெற்றது. கருணாநிதி தலைமையில் தி.மு.. அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்த தேர்தலில் பிளவுபட்ட .தி.மு.., ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று தனித்தனியாக போட்டியிட்டு தோற்றன. தேர்தலுக்குப்பின் ஜானகி அணித்தலைவர்கள் பலர், ஜெயலலிதா அணிக்கு திரும்பினர். அந்த அணிக்கு இரட்டை இலை சின்னம், தலைமை நிலையக்கட்டிடம் ஆகியவைக் கிடைத்தன. ஜெயலலிதா சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார். அதன் பிறகு ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 1989 மார்ச் 25-ந்தேதி தொடங்கிய போது பெரும் ரகளை ஏற்பட்டு "இனி ஆளும் கட்சி உறுப்பினராகத்தான் சபைக்குள் நுழைவேன்" என்று கூறிவிட்டு ஜெயலலிதா வெளியேறினார். 1990 டிசம்பர் கடைசியில் தி.மு.. அரசை மத்தியில் இருந்த சந்திரசேகர் அரசு டிஸ்மிஸ் செய்தது. அந்த அரசும் கவிழ, 1991 மே மாதம் பாராளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் நடைபெற்றன. தமிழ்நாட்டில் .தி.மு.. காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. தேர்தலில் .தி.மு.. காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றது. காங்கேயம், பர்கூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா ஜூன் 24-ந்தேதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். 5 ஆண்டுகாலம் முதல்-அமைச்சராக இருந்தார். 1996-ல் நடைபெற்ற தேர்தலில் .தி.மு.. காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் தி.மு.. வெற்றி பெற்று மந்திரிசபை அமைத்தது. கருணாநிதி முதல்-அமைச்சர் ஆனார். வழக்குகள் அதன்பின், ஜெயலலிதா மீதும், அவர் தோழி சசிகலா மற்றும் சசிகலா உறவினர்கள் மீதும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதையொட்டி 1996 ஜூன் மாதம் சசிகலா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடப்பட்டார். 1996 டிசம்பரில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 28 நாட்கள் சிறையில் இருந்த பின் 1997 ஜனவரி 3-ந்தேதி ஜாமீனில் விடப்பட்டார். ஜெயலலிதா மீது 7 வழக்குகள் போடப்பட்டன. இவற்றை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. அரசு நிறுவனமான டான்சிக்கு சொந்தமான நிலத்தை வாங்கியதாக ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி 2001-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒருவர் 2-க்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக்கூடாது என்பதால் 4 தொகுதிகளிலும் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் தேர்தலில் .தி.மு.. கூட்டணி 196 இடங்களில் வெற்றி பெற்றது. .தி.மு..வுக்கு மட்டும் 133 இடங்கள் கிடைத்தன. தனி மெஜாரிட்டியுடன் .தி.மு.. மந்திரி சபை அமைந்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார். கோர்ட்டு தீர்ப்பு ஆனால், டான்சி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 2001 செப்டம்பர் 21-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதை தொடர்ந்து ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-அமைச்சராக .பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தண்டனை ரத்து டான்சி வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்தார். அந்த அப்பீலை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் தண்டனையை ரத்து செய்து 2001 டிசம்பர் 4-ந்தேதி தீர்ப்பு கூறியது. அத்துடன், நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கிலும் டிசம்பர் 27-ந்தேதி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். எனவே ஜெயலிலதா முதல்-அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றி ஜெயலலிதா உடனடியாக முதல்-அமைச்சர் ஆக விரும்பாமல் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆண்டிப்பட்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 41 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து அவரை முதல்-அமைச்சராக .தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். மார்ச் 2-ந்தேதி தமிழ் நாட்டின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றார்.

No comments:

Post a Comment