விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்

விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம் | விமான நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- விமானப் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி மையமான (எச்..எல்.) நிறுவனம், கிராஜுவேட் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 215 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விமானப் பொறியியல், மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏவியானிக்ஸ், இன்பர்மேசன் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பிரிவுக் கான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 7-10-2016-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் .பி.சி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள் 55 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: தகுதிகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 16-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியான பிற்கால உபயோகத்திற்காக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.halindia.com.

No comments:

Post a Comment