இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு

இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை  உயர் நீதி மன்றம் தீர்ப்பு | பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற முடியாது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு: உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இத்துணை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது. ஆனால் இன்று நடந்த விவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதி விசாரணையாக விசாரிக்கப்படும். இறுதி விசாரணை வரை தற்போதுள்ள தடையாணை உள்ளபடியே தொடரும். இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும். இதன் மூலம், புதிதாக தடையாணை ஏதும் இவ்வழக்கில் பெற இயலாது. அதே சமயம், இருக்கின்ற தடையாணையை யாராலும் நீக்க முடியாது. இனி ஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே. ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம் லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்கு வர சில மாதங்கள் ஆகும். இன்னும் சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல் கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை. தங்கள் உண்மையுள்ள, ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் ,தருமபுரி மாவட்டம். High Court today has given judgment to give Promotion only to BTs not to Promoted PG Teachers as High Sch HM.thanks to our Senior Advocate Mrs.Thatchayani Reddy. We also thank the Promoted BTs who helped us as petitioners in this case & Mr.Annamalai Special President of BT Promotive Assn.. Manivasagan.

No comments:

Post a Comment