போட்டித்தேர்வுகள் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

போட்டித்தேர்வுகள் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் | பா... இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான 4,362 ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்து நியமிப்பதற்கான அறிவிக்கையை 22.05.2015 அன்று தமிழக அரசு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்பின் 20 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வுகள் முடிந்து இரு வாரங்களில் முடிவுகள் தயாராகி விட்ட போதிலும், அவை இன்று வரை வெளியிடப்படாமல் இருப்பதற்கு காரணம் ஆய்வக உதவியாளர்கள் தேர்வில் நடந்த ஊழல்கள் தான். ஆய்வக உதவியாளர் பணிகளை தலா ரூ.5 லட்சம் என்று விலை வைத்து விற்பனை செய்துவிட்ட ஆட்சியாளர்கள், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நியமனம் செய்தால், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி வழங்க முடியாது என்பதால் ஒட்டுமொத்த முடிவுகளையும் நிறுத்தி வைத்துவிட்டனர். இதனால் போட்டித் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஆய்வக உதவியாளர் இல்லாமல் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, நேர்காணல் இல்லாமல், போட்டித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment