அரசு ஊழியர் துறைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட்அரசு ஊழியர் துறைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் | தமிழக அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக் கான துறைத்தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) நடத்துகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான துறைத்தேர்வுகள் வருகிற 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடி வடைகின்றன. தேர்வுக்கு விண்ணப் பித்தவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதி விறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment