பகுதி நேர பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்


பகுதி நேர பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் | அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகியவற்றில் பகுதி நேர பிஇ, பிடெக் (சுயநிதி) படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பொறியியல், டிப்ளோமா முடித்தவர்கள் சேரலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். தற்போது பணியாற்றி வரும் இடத்துக்கும் படிக்கவுள்ள இடத்துக்கும் இடையேயான தூரம் 120 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். பொறியியல் டிப்ளோமா மதிப்பெண் (75) பணி அனுபவம் (25) அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இதற்கான வகுப்புகள் வேலைநாட்களில் தினமும் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை (3 மணி நேரம்) நடைபெறும். 2016-17-ம் கல்வி ஆண்டில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஜனவரி மாதம் 4-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.annauniv.edu/bept/2016) விண்ணப்பிக்க வேண் டும் என்று அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.கணேசன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment