பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்


பாராளுமன்றம் 31-ந்தேதி கூடுகிறது - பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் | பாராளுமன்றம் 31-ந்தேதி கூடுகிறது. பிப்ரவரி (அடுத்த மாதம்) 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது மரபாக இருந்து வருகிறது. மத்திய அரசு முடிவு ஆனால் இப்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதால், பட்ஜெட் நடவடிக்கைகள் மே மாத மத்தியில்தான் முடியும். வழக்கமாக ஜூன் மாதம் பருவமழை தொடங்கி விடும். அக்டோபர் மாதம் வரையில் பெரும்பாலும் மாநிலங்களில் பெரும்பாலான திட்டங்களும், செலவினங்களும் தொடங்குவதில்லை. எல்லாவற்றிலும் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு முடிவு கட்டி, பட்ஜெட்டை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் 1-ந்தேதி) அமல்படுத்தும் விதத்தில், முன்கூட்டியே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்தது. ஒரே பட்ஜெட் இதேபோன்று கடந்த 92 ஆண்டு காலமாக ரெயில்வே துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ரெயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுக்கு முந்தைய நாளில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் மத்திய அரசு, ரெயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பொது பட்ஜெட்டில் ரெயில்வே பட்ஜெட்டை இணைத்துவிட தீர்மானித்தது. இதுதொடர்பாக ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு விடுத்த கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டு விட்டது. எனவே இந்த ஆண்டு ரெயில்வேக்கென தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட்டின் ஒரு அங்கமாக ரெயில் பட்ஜெட் இருக்கும். மத்திய மந்திரிகள் குழு முடிவு இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி முடிவு எடுப்பதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். இதில் மூத்த மத்திய மந்திரிகள் அனந்தகுமார், ரவிசங்கர் பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கீழ்க் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரை * பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை இந்த மாதம் 31-ந்தேதி கூட்ட வேண்டும். * ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில், பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் 31-ந்தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையை இடம் பெறச்செய்ய வேண்டும். * அதே நாளில் பட்ஜெட்டுக்கு முந்தைய நடவடிக்கையான பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 1-ந்தேதி பட்ஜெட் * பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 9-ந்தேதி வரை நடத்த வேண்டும். * பட்ஜெட் தொடரின் இரண்டாவது கட்டத்தை மார்ச் மாதம் முதல் வாரம் தொடங்கி நடத்த வேண்டும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி அமல் இதன்படி நிதி மந்திரி அருண் ஜெட்லி, பிப்ரவரி 1-ந்தேதி பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டால், பட்ஜெட் நடை முறைகள் மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் முடிந்து விடும். நிதி ஆண்டின் முதல் நாளில் (ஏப்ரல் 1-ந்தேதி) பட்ஜெட் அமலுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளது. இது திட்டப்பணிகள் முழு வேகத்துடன், சீராகவும் நடைபெற உறுதுணையாக இருக் கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments