சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்


சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம் ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடு | சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடை கிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி ஆரம்பித்து 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலை யில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வு கள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சிபிஎஸ்இ நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவை, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. தற்போதைய சூழலை தீவிரமாகப் பரிசீலித்து இத்தேர்வு ஒருவாரம் தள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராவதுடன், தேர்வையும் இடையூறின்றி தொடர்ச்சியாகவும் நடத்த முடியும். சிபிஎஸ்இ தேர்வுக்கு முன்ன தாக ஜெஇஇ (ஜாயிண்ட் என்ஜினீயரிங் தேர்வு) மற்றும் நீட் தேர்வு நடைபெறவிருப்பதால், மாணவர்கள் இத்தேர்வு எழுத வசதியாகவும், அதேநேரத்தில் சிபிஎஸ்இ-யின் முக்கிய பாடத் தேர்வுகளுக்கு இடையே இடை வெளி இருக்கும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. விடைத்தாள்களை விரைவாக திருத்தி குறித்த நேரத் தில் தேர்வு முடிவுகள் வெளியிட வும் ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்தாண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 14 லட்சத்து 91 ஆயிரத்து 371 பேர் எழுதினர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்து 65 ஆயிரத்து 179 பேர் எழுதினார்கள். இந்தாண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதுகிறார்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவர்கள் எழுதுகிறார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போதைய சூழலை தீவிரமாகப் பரிசீலித்து இத்தேர்வு ஒருவாரம் தள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராவதுடன், தேர்வையும் இடையூறின்றி தொடர்ச்சியாகவும் நடத்த முடியும்.

Comments