SCROL

Thursday, January 5, 2017

அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 6 லட்சத்து 19 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள் திட்டத்தை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.


அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 6 லட்சத்து 19 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள் திட்டத்தை முதல்-அமைச்சர் .பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். | அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 6 லட்சத்து 19 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் .பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். விலை இல்லா சைக்கிள் திட்டம் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலைஇல்லா மிதிவண்டிகள் (சைக்கிள்) வழங்கும் திட்டம் 2001-2002-ம் கல்வி ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ- மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவிகள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். 7 மாணவிகளுக்கு... ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, 2016-2017-ம் கல்வியாண்டில், ரூ.243 கோடியே 96 லட்சம் செலவில் 11-ம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் .பன்னீர்செல்வம் 7 மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment