ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஜன.16 வரை விண்ணப்பிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு


ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஜன.16 வரை விண்ணப்பிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு | ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜெஇஇ மெயின் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி நடை பெறவுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க கடைசி நாள் ஜனவரி 2-ம் தேதி என்று சிபிஎஸ்சி முன்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் வேண்டுகோளை ஏற்று, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேர்வை நடத்தவுள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்கும் முறை, பாடத்திட்டம், தேர்வு மையம், 2015-ம் ஆண்டு வினாத்தாள் உள்ளிட்ட விவரங்களை www.jeemain.nic.in இணைய தளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment