பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


National Aptitude Test in Architecture

 | பி.ஆர்க்., நுழைவுத்தேர்வில் அதிரடி மாற்றம் : ஆன்லைன் பதிவு துவக்கம்.| பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்டட வடிவமைப்பு மற்றும் மாதிரி கட்டமைப்பை உருவாக்குவதற்கான, ஆர்க்கிடெக்ட் படிப்பான, பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., நாடு முழுவதும், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் உள்ளன. இந்த படிப்புகள், தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2வில், கணிதப் பிரிவு படித்தோர், பி.ஆர்க்., படிப்பில் சேரலாம். இதற்கு, 'நாட்டா' எனப்படும், தேசிய திறன் மற்றும் நுழைவுத் தேர்வு, ஏப்., மே மாதங்களில் நடத்தப்படும். இதில், பல முறைகேடுகள் ஏற்படுவதாகவும், மாணவர்களின் தகுதி சரியாக நிர்ணயிக்கப்படுவது இல்லை என்றும் புகார் எழுந்தது. எனவே, இந்த ஆண்டு முதல், ஒரே நாளில், எழுத்து மற்றும் வரைபடத் தேர்வையும் நடத்தும் மாற்றத்தை, தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும், ஏப்., 16, காலை, 11:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம், 200 மதிப்பெண்களில், பிரிவில், கணிதம் குறித்து, 40 மதிப்பெண்களுக்கு, 20 கேள்விகள்; பொது திறன் குறித்து, 80 மதிப்பெண்களுக்கு, 40 கேள்விகள்; பி பிரிவில், 80 மதிப்பெண்களுக்கு, இரண்டு வரைபடங்களும் இடம் பெறும். தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, http://www.nata.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.z

Comments