2016 செப்டம்பர் எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ்-2 துணைத் தேர்வுகளின் நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்கள் ஜனவரி 4 முதல் வினியோகம்


2016 செப்டம்பர் எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ்-2 துணைத் தேர்வுகளின்  நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்கள் ஜனவரி 4 முதல் வினியோகம் | நடைபெற்று முடிந்த 2016-ம் வருடம் செப்டம்பர் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுகளை எழுதியவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மற்றும் ஜூன் 2016 பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் கடந்த செப்டம்பர் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுகளை தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும், இதர தேர்வர்களுக்கு கடந்த செப்டம்பர் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். இச்சான்றிதழினை நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment