Monday, January 9, 2017

எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை


எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி..ராமன் அறிவுரை | 'உங்கள் கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண்தான்' என்று 'தி இந்து' தமிழ் நாளிதழ் மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய 'இனிது இனிது தேர்வு இனிது' நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சி..ராமன் தெரிவித்தார். பிளஸ் 2 படிக்கும் மாணவர் களுக்கு பொதுத் தேர்வு குறித்து வழிகாட்டும் வகையில், 'தி இந்து' தமிழ் நாளிதழும், சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி யும் இணைந்து 'இனிது இனிது தேர்வு இனிது' என்ற நிகழ்ச்சியை வேலூரில் நேற்று நடத்தின. வேலூர் சித்ரா மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சி..ராமன் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: தேர்வு எழுதுவது என்பது திறமைக்கு சவாலான வேலை. அதை எவ்வாறு எளிதாக கையாளலாம் என்பதற்கான பல்வேறு உத்திகளை எடுத்துக்கூற இங்கு வல்லுநர்கள் வந்துள்ளனர். மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்க வேண்டும். உங்கள் கனவுகளின் திருப்பு முனை பிளஸ் 2 மதிப்பெண்தான். மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இஷ்டப்பட்டு படித்தல் வேண்டும் இப்போது கஷ்டப் படாமல் ஜாலியாக இருந்தால் பிளஸ் 2-க்குப் பிறகு கஷ்டப் படுவீர்கள். இஷ்டப்பட்டு படித்தால் கஷ்டம் இருக்காது. 1992-க்குப் பிறகு பிறந்தவர்களை 'இசட்' பிரிவு தலைமுறையினர் என வகைப்படுத்தி உள்ளனர். இவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள். இந்தத் திறமையை சரியாக பயன்படுத்தினால் சாதிக்க முடியும். லட்சியத்தைப் பெரிதாக வைத்துக்கொண்டு படிக்க வேண்டும். ஜாலியாக படித்து ஈஸியாக ஜெயிக்க வேண்டும். நான் பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்தேன். என்னுடன் படித்த பலர் டியூஷன் சென்றனர். நான் மற்றும் எனது நண்பர்கள் புனிதன், அப்துல் ஆகி யோர் டியூஷன் செல்லவில்லை. நண்பர் புனிதன் அன்றைய பாடங் களை அன்றைய தினமே படித்து முடிப்பார். டியூஷன் செல்லாத புனிதன், அப்துல் இருவரும் பள்ளி அளவில் முதலிடம் பிடித்து மருத் துவர்கள் ஆகிவிட்டனர். அர்ப் பணிப்பு இருந்தால் சாதிக்க முடியும் என்பதே இதற்கு அடையாளம். 135 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க 'தி இந்து' குழுமம் கடந்த 2013-ம் ஆண்டு 'தி இந்து' தமிழ் நாளிதழ் மூலம் மக்களிடம் நெருங்கி வந்துள்ளார்கள். இவர் கள் மற்ற நாளிதழ்களைக் காட்டி லும் வேறுபடுத்திக் காட்டி எல்லா விதமான செய்திகளையும் வெளி யிடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்த முயற்சி எடுத்துள் ளார்கள் என்று அவர் கூறினார். மாணவர் பருவம் அரிது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது: அரிது அரிது மாணவர் பருவம் அரிது. வாழ்க்கையில் திருப்பு முனையாகக் கூடிய பிளஸ் 2 தேர்வை நீங்கள் எதிர்கொண்டுள் ளீர்கள். நமது கல்வி முறையில் மதிப்பெண் பெறுவதன் மூலமே மாணவனின் கற்றல் அறிவு தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப நாம் படிக்க வேண்டும். பாடங்களை படிக்கும்போது ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி படிக்க வேண்டும். படிப்பு முடிவில் லாத பயணம். நீங்கள் அதைப் படிக்கத் தொடங்கி 12 ஆண்டுகள் கடந்துவிட்டீர்கள். உங்களை பள்ளியில் சேர்க்கும்போது நம்மால் முடியாததை, நம்முடைய குழந்தைகள் வளர்ந்து சாதிப் பார்கள் என்ற நம்பிக்கை, ஆசை யோடு ஒவ்வொரு பெற்றோரும் பள்ளியில் சேர்த்திருப்பார்கள். உங்களுக்கும் கூட நிறைய ஆசைகள் லட்சியங்கள் இருக்கும். பொதுத் தேர்வுக்கான கால இடைவெளியை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் அதை அப்போதே மறந்துவிடுங்கள். மகிழ்ச்சி மட்டுமே இருக்க வேண்டும். அடுத்த தேர்வுக்காக உற்சாகமாக படிக்கத் தொடங்குங்கள். பெற் றோரின் எண்ணங்கள், ஏக்கங்கள் ஆசிரியர்களின் கனவுகளை நனவாக்குங்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் 'தி இந்து' மண்டல பொது மேலாளர் டி.ராஜ்குமார், வித்யா கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.சுப்பிரமணியம் ஆகியோர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாற் றினர். எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி தலைவர் கே.ராமதாஸ், இயக்குநர் சுகந்தி ராமதாஸ், செயலாளர் எஸ்.சுரேஷ்பாபு, கல்லூரி முதல்வர் எம்.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண் பெறுவது தொடர் பாக வல்லுநர்கள் என்.குமார வேல் (உயிரியல்), திருமாறன் (இயற்பியல்), பரீத் அஸ்லாம் (வேதி யியல்), மணிமாறன் (கணிதம்) ஆகியோர் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியை எஸ்கேஆர் கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் செந்தில்குமார் ஒருங் கிணைத்தார். முடிவில், எஸ்கேஆர் கல்லூரியின் மின்னணு மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் சங்கர் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment