எஸ்எஸ்சி தேர்வு ஜன.7-ல் தொடங்குகிறது ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்


ஸ்எஸ்சி தேர்வு ஜன.7-ல் தொடங்குகிறது ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் | மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்எஸ்சி) ஒருங்கிணைந்த மேல் நிலை கல்வித்தகுதி நிலையிலான தேர்வின் முதல்கட்ட தேர்வு ஜனவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை ஆன்லைன் வழியில் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத் தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உட்பட தென்பிராந்தியத்தில் 46 மையங் களில் தினமும் இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) தேர்வாணை யத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருக் கிறது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதி விறக்கம் செய்து கொள்ள லாம். இதுகுறித்து விண்ணப்பதாரர் களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் -மெயில் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி தேர்விலும் கலந்துகொள்ளலாம். தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-28251139 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94451-95946 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Comments