இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


கப்பல் தளத்தில் பணி | இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களை பழுதுபார்க்கும் பணி மனைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. கர்வார் மற்றும் மும்பையில் அமைந்துள்ள பணிமனைகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 121 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். என்ஜினீயரிங் பிரிவில் 33 பேரும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 14 பேரும், வெப்பன் பிரிவில் 8 பேரும், கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் 24 பேரும், மெயின்டனன்ஸ் பிரிவில் 10 பேரும், புரொடக்சன் பிரிவில் 32 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள், பணியிடங்கள் சார்ந்த டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு டிசம்பர் 24-30 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.

Comments