கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு


கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு | மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் அந்த ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு அஞ்சல் ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை இடம்பெறவில்லை. இதுதொடர்பாக தமிழ கத்தில் பணியாற்றும் அஞ்சல் ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்களில் பொங்கலுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. பண்டிகையை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் முன்அனுமதி பெற்றே விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கின்ற நிலையில் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Comments