தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு


தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு | தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று, கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையை சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி (சனிக்கிழமை) வருகிறது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 13-ம் தேதி போகிப் பண்டிகை முதல் 16-ம் தேதி காணும் பொங்கல் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டு, விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டதாக நேற்று முன்தினம் இரவு தகவல் வெளியானது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, திமுக செயல் தலைவர் மு..ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலை வர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் .பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். திமுக சார்பில் 11-ம் தேதி (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று ஏற் கெனவே மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள தசரா பண் டிகையை எடுத்துவிட்டு, அதற்கு பதில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை யில் நேற்று நடந்த மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட் டது. 'விருப்ப விடுமுறையாக இருந்த பொங்கல் தினத்தை கட்டாய விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. செப்டம்பர் 28-ம் தேதி கட்டாய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டி ருந்த தசரா பண்டிகைக்கான கூடுதல் விடுமுறை தினம், விருப்ப விடுமுறை தினமாக மாற் றப்படுகிறது' என அறிவிக்கப் பட்டுள்ளது.

Comments