விஜயா வங்கி மற்றும் நபார்டு வங்கியில் அதிகாரி பணி


வங்கிகளில் அதிகாரி வேலை | விஜயா வங்கி மற்றும் நபார்டு வங்கியில் அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு 44 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. செக்யூரிட்டி - 20, சட்டம் -14, ராஜ் பாஷா - 10 ஆகிய பிரிவுகளில் அதிகாரி பணியிடங்கள் உள்ளன. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. வயது வரம்பு தளர்வும் அரசு விதிகளின்படி அனு மதிக்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பு, இந்தி-ஆங்கிலம் முதுநிலை படிப்பு, சட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் காணலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போது மானது. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 9-1-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் நகல் விண்ணப்பத்தை 16-1-2017-ந் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை www.vijayabank.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நபார்டு வங்கி: வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக நபார்டு எனப்படுகிறது. தற்போது இந்த வங்கி யில் சிறப்பு அதிகாரி மற்றும் அசிஸ்டன்ட் சிவில் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. 31-12-2016 தேதியில் 63 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. பொருளாதாரம், வேளாண் பொருளாதாரம் பிரிவில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், சி.., எம்.பி.. பி..- எம்.பி.., மற்றும் பல்வேறு முதுநிலை பிரிவுகளில் பட்டம் பெற்றவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி, இணைய தள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 5-1-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.nabard.org என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Comments