ம.பி.யில் ஆசிரியர்களின் சீருடையாகிறது ‘நேரு ஜாக்கெட்’


.பி.யில் ஆசிரியர்களின் சீருடையாகிறது 'நேரு ஜாக்கெட்' | மத்தியப் பிரதேசத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளி ஆசிரியர் கள் சீருடையாக 'நேரு ஜாக்கெட்' அணிய சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இது பிரதமர் மோடியை பிரபலப்படுத்தும் முயற்சி என சர்ச்சை எழுந்துள்ளது. வட இந்திய அரசியல்வாதி களின் உடைகளில் 'நேரு ஜாக் கெட்' முக்கியப் பங்கு வகிக்கிறது. வெண்ணிற குர்தா, பைஜாமாவின் மேலங்கியாக இந்த ஜாக்கெட் அணியப்படுகிறது. வெண்ணிற ஆடை மீது கறுப்பு நிறத்தில் இந்த ஜாக்கெட் தரும் மிடுக்கை அரசியல்வாதிகள் அதிகம் விரும்பு கின்றனர். இந்த ஆடையை நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர் லால் நேரு அதிகம் விரும்பி அணிந்தார். இதனால் அது அவரது பெயரிலேயே 'நேரு ஜாக்கெட்' என இது உலகம் முழுவதும் பிரபலமானது. .பி.யில் இந்த ஜாக்கெட்டை பள்ளி ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டு முதல் அணிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ் வொரு ஆசிரியருக்கும் அரசே தனது செலவில் 2 ஜாக்கெட்கள் வழங்க உள்ளது. பெண் ஆசிரி யர்களும் இந்த ஜாக்கெட்டை தங்கள் சேலை அல்லது சுடிதார் மீது அணிய வேண்டும். இதற்கு உதாரணமாக, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அணி வதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அதேசமயம் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டது முதல் பல்வேறு நிறங்களில் இந்த ஜாக்கெட்டை அணியத் தொடங்கினார். குறிப்பாக ரோஸ், சிவப்பு, பச்சை போன்ற நிறங் களில் மோடி அணிந்தது பார்ப்பவர் கண்களை கவர்ந்தது. பாஜகவினர் மட்டுமின்றி பிற கட்சியினரும் இதை அணியத் தொடங்கினர். தற்போது அதன் பெயர் 'மோடி ஜாக்கெட்' என மெல்ல மாறி வரு கிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் .பி.யில் ஆசிரியர்கள் ஜாக்கெட் அணிய உத்தரவிட்டி ருப்பது, பிரதமர் மோடியை பிரபலப்படுத்தும் முயற்சி என சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து .பி. கல்வியாளர் ஜமீருத்தின் அகமது, 'தி இந்து' விடம் கூறும்போது, "ஆங்கிலத்தில் 'வேஸ் கோட்' எனப்படும் ஜாக்கெட் இந்தியாவில் 'நேரு ஜாக்கெட்' என்ற பெயரில்தான் பிரபலம் ஆனது. இதிலும் மோடி யின் பெயரை நுழைத்து அரசியல் லாபம் பெற அரசு முயற்சிக்கிறது. இந்த சீருடைக்கு ஆகும் செலவில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 42,000 ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பலாம்" என்றார். கடந்த 2012-ல் வெளிநாட்டு பத்திரிகை ஒன்று சர்வதேச அளவில் அரசியல்வாதிகளின் 10 சிறந்த உடைகளை வரிசைப்படுத்தியது. இதில் 'நேரு ஜாக்கெட்' ஏழாவது இடம் வகித்தது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகப் பதவி வகிக்கும் கிரண்பேடியும் 'நேரு ஜாக்கெட்' அணியும் வழக்கம் கொண்டவர். இதை .பி.யின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அர்ச்சனா சித்னிஸும் அணிந்து வருகிறார். ஆனால் அர்ச்சனா தான் அணிவது நேரு ஜாக்கெட் அல்ல, மோடி ஜாக்கெட் என்று பல இடங்களில் பேசி வருவ தாகக் கூறப்படுகிறது. எனவே, மோடியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் சீருடையாக இந்த ஜாக்கெட் அறிவிக்கப்பட்டிருப்ப தாக புகார் எழுந்துள்ளது. இதை மறுக்கும் வகையில் .பி. கல்வி அமைச்சர் குன்வர் விஜய் ஷா கூறும்போது, "ஆசிரியர்கள் தாங்கள் ஒரு முக்கியப் பணி யாற்றுவதாக உணரச் செய்வதே இதன் நோக்கம். இதன்மூலம் ஆசிரியர் பணிக்கு அரசு அதிகம் மதிப்பளிக்கிறது என்பதையும் உணர்த்துகிறோம். ஆனால் இதில் தலைவர்களின் பெயரைச் சேர்த்து சர்ச்சையை கிளப்ப நாங்கள் விரும்பவில்லை. மாறாக பள்ளி களில் முற்றிலும் கல்விக்கான சூழலை ஏற்படுத்தவே விரும்பு கிறோம்" என்றார். இந்த மேலாடை மீது இந்தியில் 'ராஷ்ட்ரிய நிர்மதா (தேசம் உரு வாக்குபவர்)' என்ற வாசகத்துடன் பேட்ச்சும் குத்தப்பட்டிருக்கும். இந்த சீருடையை சிறப்பாக வடிவமைக்கும் பணியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Comments