தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்


தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம் | தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார். அவரது நியமனம் தொடர்பான விதிமுறைகள் பின்னர் தனியாக பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

No comments:

Post a Comment