டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது


டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது | டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கலந்தாய்வு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் 2015-ம் ஆண்டு மே 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு, சென்னை பிரேசர் சாலையில் உள்ள (கோட்டை ரெயில் நிலையம் அருகில்) தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 24-ந்தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். மறுவாய்ப்பு கிடையாது கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இட ஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற முடியாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment