SCROL

Wednesday, February 22, 2017

எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 28 வரை காலஅவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 28 வரை காலஅவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்பு மாணவர் சேர்க்கைக்காக 'டான் செட்' என்ற பொது நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படு கிறது. இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. வரும் கல்வி ஆண்டு (2017-18) மாணவர் சேர்க்கைக்கான 'டான் செட்' தேர்வு மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 29-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப் பட்டிருப்பதாக டான்செட் செய லாளர் பேராசிரியை பி.மல்லிகா அறிவித்துள்ளார். இதற்கான இணையதள முகவரி: www.annauniv.edu/tancet2017 என்பதாகும். இதுவரை சுமார் 24 ஆயிரம் பேர் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதியும் எம்இ, எம்டெக், எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 26-ம் தேதியும் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment