SCROL

Tuesday, February 28, 2017

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை


பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.. சுற்றறிக்கை | பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்கள் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்று சி.பி.எஸ்.. வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. சி.சி.டி.வி. கேமரா சமீபத்தில் வட மாநிலத்தில் பள்ளிக்கூட வாகனம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி பல மாணவர்கள் உயிரிழந்தனர். இதையொட்டி சி.பி.எஸ்.. என்ற மத்திய கல்வி வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.. பள்ளிகள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- * மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் உள்ளிட்ட பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமரா கட்டாயம் பொருத்தி, அந்த கேமரா எந்த நேரமும் செயல்படவேண்டும். * பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து, பள்ளிவாகனம் என்று பஸ்சின் முன்னும், பின்னும் பார்த்த உடன் பளிச்சென்று தெரியும் படி எழுத வேண்டும். * பஸ்சின் கதவுகள் சரியாக மூடும்படி இருக்கவேண்டும். ஜி.பி.எஸ். கருவி * பஸ் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல். * மாணவர்களுக்கு இருக்கைகள் பாதுகாப்பான முறையில் அமைத்தல். * பஸ்களில் தீ அணைப்பு கருவிகள் 2 இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்தல். * மணிக்கு 40 கிலோ மீட்டருக்கு அதிகமாக பஸ்கள் செல்லாத வகையில் அதற்கான கருவி பொருத்தவேண்டும். கதவுகள் * அவசர நேரத்தில் வெளியே மாணவர்கள் வருவதற்கு அதற்கான கதவுகள் அமைக்கவேண்டும். * பஸ்சுக்காக பள்ளி நிர்வாகம் தனி செல்போன் வைக்கவேண்டும். அந்த போனில் அவசர காலத்தில் பஸ்சின் டிரைவர் அல்லது கண்டக்டர் தொடர்பு கொள்ளவேண்டும். * பஸ்சில் அவசர கால உதவி பெட்டி அவசியம் தேவை. * மாணவர்கள் அவர்களின் புத்தக பைகளை பாதுகாப்பாக பஸ்சில் வைக்க சரியான இடம் ஒதுக்குதல். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment