இளநிலை பொறியாளர் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.


இளநிலை பொறியாளர் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட் | மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் இளநிலை பொறியாளர்களுக்கான தேர்வு மார்ச் 1 முதல் 4-ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறவுள்ளது. தென் பிராந்திய பகுதியில் 12 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 46 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி; மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் அளித்த தொலைபேசி எண்ணில் குறுந்தகவலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய 044-28251139 மற்றும் 9445195946 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Comments