சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.


சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி | சங்கர் ஐஏஎஸ் அகாடமி, மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆகியவை இணைந்து தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியை மத்திய சமூக நீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்காக செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் தலா 50 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாத உதவித் தொகையும் உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கும் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறும். பின்னர் சான்றிதழ் சரிபார்த்து தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044 43533445, 64597222, 45522227 மற்றும் 9444166435 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். www.shankariasacademy.com என்ற இணையதளத்தையும் காணலாம். 

Comments

  1. Thanks for sharing the information about Group 4 and VAO Exam Coaching Centre Chennai. I will make sure to share this with my friends.

    ReplyDelete

Post a Comment