வீடு வாங்க பிஎப் கணக்கில் இருந்து 90% பணம் எடுக்கலாம் புதிய விதிகளை அமல்படுத்த அரசு தீவிரம்வீடு வாங்க பிஎப் கணக்கில் இருந்து 90% பணம் எடுக்கலாம் புதிய விதிகளை அமல்படுத்த அரசு தீவிரம் | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) உறுப்பினர்களாக உள்ள 4 கோடி பேரும் பயனடையும் வகையில் புதிய விதிமுறைகளைச் செயல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி சொந்தமாக வீடு வாங்க முயலும் இபிஎப் உறுப்பினர்கள் தங்களது சேமிப்பிலிருந்து 90 சதவீதத் தொகையை பெற முடியும். வீடு வாங்குவதற்கு முன்பணம் செலுத்த வசதியாக இந்த திருத்தத்தைக் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது. இத்தகவலை மாநிலங்களவை யில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இந்த திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தொழிலாளர்கள் தங்களது வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தவும் முடியும். புதிய இபிஎப் திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள், ஒரு குழுவாக சேர்ந்து கூட்டுறவு சங்கம் தொடங்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த சலுகையைப் பெற முடியும் என்று அமைச்சர் கூறினார். இபிஎப் திட்டத்தின் விதிகள் 1952-ல் மாற்றங்கள் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பத்தி 68 பிடி-யில் உரிய திருத்தங் கள் செய்யப்படும் என்று எழுத்து மூலமான கேள்விக்கு பதிலளிக் கையில் தத்தாத்ரேயா கூறினார். இந்த திருத்தத்தின் மூலம் கூட்டுறவு சங்கம் அல்லது வீட்டு வசதி சங்கத்தில் உறுப்பினராக உள்ள (இந்த சங்கங்களில் குறைந்த பட்சம் 10 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்) பணியாளர் வீடு வாங்க, மனை வாங்க, வீட்டை புதுப்பிக்க தனது இபிஎப் சேமிப்புத் தொகையில் 90 சதவீதத்தைப் பெற முடியும். இந்த திருத்தமானது, ஏற் கெனவே உள்ள கடனுக்கான மாதாந்திர சுலபத் தவணைகளை இபிஎப் கணக்கு மூலம் செலுத்து வதற்கும் வகை செய்கிறது. இபிஎப் சட்டத்தில் வீடு வாங்க வசதி எனும் பிரிவு சேர்க்கப்பட்டு, உறுப்பினர் சேர்த்த தொகையில் அதிகபட்சம் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மார்ச் 2016 நிலவரப்படி இபிஎப் கணக்கில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17.14 கோடியாகும். கணக்கி லிருந்து பணம் பெறுவதற்கான விதிமுறைகளுக்குள்பட்டவர் களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment