தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.


தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி | தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக் கப்படுவதை ஒழுங்குபடுத்தும் வகை யில் கடந்த 2009-ம் ஆண்டு கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் பள்ளிகளின் உள்கட் டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப் படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் செய்யவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவராக பணியாற்றி வந்த நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலுவின் பதவிக்காலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 30-ல் முடிவடைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். நீதிபதி மாசிலாமணி, பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதை தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஆர்.நந்தகுமார் வரவேற் றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தலை வர் நியமிக்கப்படவில்லை. இப்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுக்கலாம் கட்டணக் குழுவின் புதிய தலைவரான நீதிபதி டி.வி.மாசிலாமணி, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவினங்கள் உயர்ந் துள்ளதையும், கட்டிடச் சான்று, உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையினர் சான்று, அங்கீகாரம், பல்வேறுவிதமான சான்றிதழ்கள் வாங்குவதற்கு செலவு, காப்பீட்டு கட்டணம், இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்குமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

Comments