புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண் கட்டாயம்


புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண் கட்டாயம் | இனிமேல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு அதன் உரிமையாளரின் செல்போன் எண், ஆதார் எண், பான் அட்டை எண் ஆகியவற்றை கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக போக்குவரத்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சுற்றறிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கமிஷனர் தயானந்த் கட்டாரியா, அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கும் (ஆர்.டி.ஓ.) அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தற்போது போக்குவரத்து வாகனங்கள் பதிவு சான்றிதழ் தொடர்பான மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், புதிய வாகன உரிமையாளரின் செல்போன் எண், ஆதார் எண், பான் அட்டை எண் ஆகிய தகவல்களை சேர்ப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் மென்பொருளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டிப்பாக வேண்டும் இந்த தகவல்கள் அனைத்தும் வாகன பதிவு சான்றிதழில் (ஆர்.சி. சான்றிதழ்) சேர்க்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அந்த தகவல்களை ஆர்.டி.ஓ. யாரும் சேகரிப்பதில்லை. எனவே இனிமேல் புதிய வாகனத்தை பதிவு செய்வதற்காக அதன் உரிமையாளரால் தரப்படும் விண்ணப்பத்தில், அவருடைய செல்போன் எண், ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை கண்டிப்பாக பெற வேண்டும் என்று பதிவு அதிகாரிகள் மற்றும் உதவி பதிவு அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது. அப்படி பெறப்படும் அந்த தகவல்கள் அனைத்தும் வாகன பதிவு சான்றிதழில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment