மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும் | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயரும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 2 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு இந்த சிறிய அளவு உயர்வுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுபற்றி கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என்.குட்டி கூறியதாவது:- இப்போது உள்ள விலைவாசி உயர்வுக்கும், இந்த அகவிலைப்படி உயர்வு முடிவுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. விலைவாசி புள்ளிவிவர சேகரிப்பில் உள்ள தரமற்ற நிலையே இதற்கு காரணம். கூட்டமைப்பின் அடுத்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு குட்டி கூறினார்.

Comments