SCROL

Monday, March 6, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம்


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம் | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடை பெறவுள்ளது. இதற்கான விண்ணப் பப் படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் விற்பனை செய் யப்படுகின்றன. விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் என்றால் ரூ.250 மட்டும். தேர்வுக் கட்டணத்தை விண்ணப் பப் படிவத்துடன் இணைக்கப்பட் டுள்ள வங்கிச் செலான் மூலமாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி இவற் றில் ஏதேனும் ஒரு வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது. எங்கெங்கு கிடைக்கும்? விண்ணப்பம் படிவம் விற்பனை செய்யப்படும் இடங்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற் றுக்கொள்ளப்படும் மையங்கள் பற்றிய விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) மாவட்ட வாரி யாக வெளியிடப்பட்டு இருக்கிறது. சென்னையில் திருவல்லிக்கேணி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சூளை பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் மேல்நிலைப்பள்ளி, வேப் பேரி டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, பிராட்வே பச்சையப்பன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி உட்பட 17 இடங்களில் விண்ணப் பங்கள் விற்பனை செய்யப்படு கின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கும் வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், தெற்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் ராயபுரம் சிஎஸ்ஐ ராஜகோபால் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment