SCROL

Monday, April 17, 2017

ஆயுதப்படைப் பிரிவில் உதவி கமாண்டன்ட் தேர்வு 179 பணியிடங்கள். மொத்தம் 179 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விரிவான விவரம்...


ஆயுதப்படைப் பிரிவில் உதவி கமாண்டன்ட் தேர்வு 179 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது | ஆயுதப் படைப்பிரிவில் உதவி கமாண்டன்ட் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 179 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய ஆயுதப்படைப் பிரிவு சுருக்கமாக சி.ஏ.பி.எப். என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரிவின் கீழ் எல்லைக்காவல் படை (பி.எஸ்.எப்.), ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.), தொழிற்சாலை பாதுகாப்பு படை - (சி.ஐ.எஸ்.எப்.), எஸ்.எஸ்.பி. (சசாஸ்திரா சீமா பல்) ஆகிய படைப்பிரிவுகள் இயங்குகின்றன. தற்போது இந்த படைப்பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 179 பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. உதவி கமாண்டன்ட் -2017 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1992 மற்றும் 1-8-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்.சி.சி. 'பி' அல்லது 'சி' சான்றிதழ் பெற்றிருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும். உடல் தகுதி: விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆண்கள் மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ.யும்., 5 செ.மீ. விரியும் திறனும் இருக்க வேண்டும். ஆண்கள், குறைந்தபட்சம் 50 கிலோ எடையும், பெண்கள் 46 கிலோ எடையும் இருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு (பேப்பர்-1, பேப்பர்-2), நேர்காணல், ஆளுமைத்திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கையொப்பம் மற்றும் புகைப்படத்தை தேவையான இடத்தில் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி தேதி: விண்ணப்பிக்க கடைசி நாள் : 5-5-2017-ந் தேதி விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsc.gov.in. ,www.upsconline.nic.in போன்ற இணையதள பக்கங்களை பார்க்கலாம்.

No comments:

Post a Comment