தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு : முதல்வர் அறிவிப்பு | தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படியானது 4% உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல் செய்யப்படும். இதன் மூலம் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3080 வரையும், ஓய்வு ஊதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1540 வரையும் ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் பயன் பெறுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment