தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் எழுதினர்


தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் எழுதினர்  | தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று நடந்தது. விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். இன்றும் (ஞாயிற்றுக் கிழமை) தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதன்படி இந்த தேர்வு 29-ந் தேதி , 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பி.எட். முடித்தவர்களுக்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று நடந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 598 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தேர்வாளர்கள் எடுத்து வந்த பை மற்றும் செல்போன் போன்றவற்றை தேர்வு கண்காணிப்பாளர்கள் வாங்கி பாதுகாப்பான அறைகளில் வைத்து விட்டு அதற்கான டோக்கன்களையும் வழங்கினார்கள். சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வு அறைக்கு சென்றபோது குழந்தைகளை தங்களது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். தேர்வு முடியும் வரை அவர்கள் கைக்குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் தேர்வு மையங்களின் வெளியே காத்திருந்தனர். பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட கலெக்டர் வே.அன்புசெல்வன், சென்னை மாவட்ட தகுதி தேர்வு கண்காணிப்பாளர் எஸ்.கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் சென்னையில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். தேர்வு குறித்து எஸ்.கண்ணப்பன் கூறும்போது, 'சென்னை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 147 பேர், 27 மையங்களில் தேர்வு எழுத நுழைவு சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. தேர்வு அமைதியான முறையில் நடந்து முடிந்தது' என்றார். மாநிலம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். தொடர்ந்து (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-ம் தாள் தேர்வு 1,263 மையங்களில் நடக்கிறது. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக சென்னையில் சிலர் கருத்து தெரிவித்தனர்.KEY DOWNLOAD

No comments:

Post a Comment