இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு


இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு | இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: ஏழை மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், வரும் கல்வி ஆண்டில் (2017-18) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகார கல்லூரிகளில் (சுயநிதி கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகள்) சேர விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட 3 மாவட்டங் களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள், குடும்பத்தில் முதல் முறையாக பட்டப் படிப்பு படிக்க வரும் மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு இந்த இலவச கல்வி திட்டத்தில் முன் னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத் துக்குள் இருக்க வேண்டும். இலவச கல்வி திட்டத் தில் சேருவதற்கான விண்ணப் பத்தையும் இதர விவரங்களையும் சென்னை பல்கலைக்கழக மக் கள்தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.unom.ac.in) இருந் தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளிலிருந்து (மே 12) 15 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment