பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.


அடுத்த வாரம் பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவேற்றம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 12 முதல் 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட் டது. இந்த நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கால அவகாசம் மே 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 99 ஆயிரம் பேர் விண்ணப்பம் விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த இணையதளத் தில் இருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப் படும்.

No comments:

Post a Comment