தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜுன் 2017 – ஜுன் 2017 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு 19.05.2017 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 22.05.2017 (திங்கட்கிழமை) மாலை 06.00 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜுன் 2017 - முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்விற்கு தனித்தேர்வர்களாகத் தேர்வெழுத விண்ணப்பிக்க - கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜுன் 2017 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 12.05.2017 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 18.05.2017 (வியாழக்கிழமை) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டது. தற்பொழுது மேற்காண் தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு 19.05.2017 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 22.05.2017 (திங்கட்கிழமை) மாலை 06.00 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மேற்காண் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தையும், அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து, தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று தேர்வுக்கட்டணத்தை நேரடியாக செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். விரிவான விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். DOWNLOAD

No comments:

Post a Comment