பள்ளிகள் திறக்கப்படும் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் .


பாடதிட்டங்களை மாற்றுவது குறித்து 2 நாட்களில் அரசு ஆணை வெளியிடப்படும் என்றும், பிளஸ்-1 வகுப்புக்கு இனிமேல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். ஆய்வுக்கூட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குனர் கார்மேகம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட மாநில திட்ட இயக்குனர் கண்ணப்பன், அனைவருக்கும் கல்வித் திட்டம் மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். READ MORE

No comments:

Post a Comment