SCROL

Thursday, May 25, 2017

தொழில்நுட்ப தேர்வுக்கு ஹால்டிக்கெட் இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்


தொழில்நுட்ப தேர்வுக்கு ஹால்டிக்கெட் இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம் | அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப் பித்தவர்கள் ஹால்டிக் கெட்டை இன்று (வியாழக் கிழமை) முதல் ஆன்லை னில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித் துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் மே 29-ம் தேதி தொடங்குகின்றன. இத்தேர் வுக்கு விண்ணப்பித்த வர்கள் தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை (ஹால்டிக் கெட்) அரசு தேர்வுத் துறை யின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) 25-ம் தேதி (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் போது விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை யும், பிறந்த தேதியையும் குறிப்பிட வேண்டும். அச்சுக்கலைப் பாடப் பிரிவின் அனைத்துப் பாடங் களின் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுகள் சென்னை தேர்வு மையங் களில் நடைபெறும். விவசாயப் பாடத் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர் வுக்கூட அனுமதிச்சீட் டில் குறிப்பிடப்பட் டுள்ள தேர்வு மையத் தின் முதன்மைக் கண் காணிப்பாளர் மூலம் செய்முறைத் தேர்வு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், மாதிரி அமைத் தல் (Modelling) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அந் தந்த தேர்வுக்கு தேவை யான அனைத்து உப கரணங்களையும் தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தேர்வு கால அட்டவணையும் தேர் வுத்துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment