கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு


கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு | இலவச கட்டாயக்கல்வி உரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2017-18-ம் கல்வியாண்டு முதல் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அரசால் ஆணையிடப்பட்டது. இதற்கான வசதி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இச்சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க மே 18-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான காலவரையறையை 26-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வழி காட்டுதலின்படி சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.CLICK HERE

Comments