சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.


இன்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு | சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியத் தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வைப் பொருத்தவரையில் மாணவர்கள் தங்கள் விருப்பத் தின்படி இத்தேர்வை பொதுத் தேர்வாகவும் எழுதலாம். பள்ளி தேர்வாகவும் எழுதிக்கொள்ள லாம். அந்த வகையில், 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வாகவும், 7 லட்சத்து 81 ஆயிரம் பேர் பள்ளித் தேர்வாகவும் எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங் கானா, கர்நாடகா, மகாராஷ் டிரா, கோவா, புதுச்சேரி, அந்த மான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சென்னை மண்ட லத்தில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளி யாகும் என்று தேர்வெழுதிய மாணவர் களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று மதியம் 1 மணிக்கு வெளி யாகும் என்றும் தகவல் பரவியது. தேர்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ உயர் அதிகாரியிடம் கேட்டபோது, "தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம். www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in

No comments:

Post a Comment